ஆப்கானிஸ்தானில் 1000 பேரை காவு கொண்ட பாரிய நிலநடுக்கம்!

Date:

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 1000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும், 600 பேர் படுகாயமடைந்திருக்கலாம் என ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் 51 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை மேற்கோள் காட்டியதன்படி, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தரவுகளுக்கு அமைய, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 500 கிலோமீற்றருக்கும் அதிகமான நில அதிர்வு உணரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் அலி எம் லதிஃபி, காபூலில் இருந்து அறிக்கை வெளியிட்டார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர், சுமார் 200 கிமீ (124 மைல்) தொலைவில் உள்ள மக்கள், பின் அதிர்வுகளை உணர்ந்ததாகக் கூறினார்.

இப்பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

‘அதிகாரிகள் ஹெலிகாப்டர்களை அனுப்பி, இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்க உதவி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனால் இது ஒரு தொலைதூர பகுதி மற்றும் அடைய கடினமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...