இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பெற்றோலியத்துறை அமைச்சரான ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு புது டெல்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பான பல அவசர விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சந்திப்பின் போது, இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் எரிபொருளைப் பெற்று விநியோகம் செய்வதில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து மிலிந்த மொரகொட, இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பூரிக்கு விளக்கினார்.