இலங்கையின் தேசிய கணக்குகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பான முதலாம் காலாண்டுக்கான அறிக்கையை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….
இந்த ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 1.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நான்கு நேர் சதவீதமாக காணப்பட்ட பொருளதார வளர்ச்சி வீதம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
பணவீக்கம், அந்நிய செலாவணி மதிப்பிழப்பு, டொலர் பற்றாக்குறை போன்ற பாதகமான காரணிகளால் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்து செல்வதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.