புதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் தனது சொத்துப் பிரகடனம் மற்றும் வரி அனுமதிச் சான்றிதழை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
‘இதுபோன்ற சவாலான காலத்திலும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது, மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளேன்.
இது மூழ்கும் கப்பல் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் வேகமாக ஆடும் கப்பல். யாரும் மூழ்கும் கப்பலில் ஏற வேண்டாம் என தம்மிக்க பெரேரா ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
நான் இந்த பதவிக்கு வந்தது இந்த நாட்டுக்கு ஏதாவது நன்மையை செய்யவே, பிரச்சினை இருப்பதாலதான் நான் வந்தேன் தற்போது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழி செய்யவுள்ளேன். அதற்கான கடமைகள் உள்ளன. அதை வெற்றிகரமான செய்யவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தனக்கு சிறந்ததொரு அமைச்சு பதவியை வழங்குவார்கள் எனவும் அதற்கமைய அதை எந்த முறையிலும் சிறப்பாக செய்து நாட்டை முன்னேற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.