எரிபொருளுக்காக 5 நாட்களாக காத்திருந்த 63 வயது நபர் மரணம்!

Date:

அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் இன்று (23) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் சாரதி ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

அஹங்கம, சங்கரத்ன மாவத்தையைச் சேர்ந்த 63 வயதுடைய வீரப்புலி சுனில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐந்து நாட்களாக டீசலை எதிர்பார்த்து டிப்பர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், டிப்பருக்குள் அவர் இறந்து கிடப்பதைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேரேம், உயிரிழந்தவர் நீண்ட காலமாக டீசலுக்காக காத்திருந்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த நபர் மிகவும் வயதானவர், நாங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக வெளிவரவுள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அவர் தனது லொறிக்கு டீசல் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார், ‘என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...