கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கொழும்பு கெஸ்பேவ நகரின் இருபுறமும், அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் வாகனங்கள் மைல் கணக்கான வரிசையில் காத்திருந்து எரிபொருளுக்காக காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
இதன் காரணமாக கெஸ்பேவயிலிருந்து கொழும்பு மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் கெஸ்பேவ மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதுடன் சிறிய வாகனங்கள் மாத்திரமே அவ்வீதியில் உள்நுழைய அனுமதிக்கப்பட்டன.
கெஸ்பேவ நகரை சுற்றிலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுவதாலும், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகை தந்த பெருமளவிலான மக்கள் வரிசையில் நிற்பதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.