சர்வதேச சமூகம் ஆப்கான் விடயத்தில் காட்டுகின்ற அலட்சியம் குறித்தும் கடுமையாக வருந்துவதாக ஓமான் நாட்டின் முப்தி அஹ்மத் பின் ஹமத் அல் கலீலி தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் ஏற்பட்ட பயங்கர பூமியதிர்ச்சிக்காக மிகவும் வேதனை அளிப்பதுடன் இந்த விடயத்தில் முஸ்லிம்களும் அலட்சியமாக இருப்பது இன்னும் வருத்தம்மளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானம், இஸ்லாம் என்ற இரு விடயங்கள் அவர்கள் விடயத்தில் எமக்கு இருக்கிறது.
குறிப்பாக முஸ்லிம்களும் சர்வதேச சமூகமும் மன சாட்சியோடு நடந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என ஓமான் நாட்டின் முப்தி தெரிவித்துள்ளார்.