ஜம் இய்யத்துல் உலமா சபை தலைமை பொறுப்பை தொடர்வதாக றிஸ்வி முப்தி தீர்மானம்!

Date:

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் பதவியினை தொடர அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தீர்மானித்துள்ளார்.

புதிய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (25) கொழும்பில் கூடியது.

இதன்போது இடம்பெற்ற பல்வேறு விதமான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து உலமா சபையின் தலைவர் பதவியினை தொடர றிஸ்வி முப்தி தீர்மானித்துள்ளார்

கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை கண்டி, கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற உலமா சபையின் பொதுக் கூட்டத்தில் றிஸ்வி முப்தி மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

எனினும், தலைமைப் பதவியில் இருப்பதா? இல்லையா? என்று இஸ்திகாரா செய்து தீர்மானிக்க உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுவிடம் ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தார்.

கடந்த 20 வருட காலமாக ஒன்பது தடவைகள் இவர் உலமா சபையின்  தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் 2001 இல் உலமா சபையின் யாப்பு முறையாக அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தனது தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார்.

என்றாலும் 2003 இல் மீண்டும் தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட இவர், 2004 இன் பின்பு ஒவ்வோர் மூன்று வருட காலத்திற்கும் தலைவராக தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

எனினும், கடந்த 2016இலும், 2019இலும் இவர் பதவியிலிருந்து விலகுவதற்கு அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...