தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இன்று (28) முறைப்பாடு செய்துள்ளனர்.
போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தனியார் பேரூந்துகளுக்கு தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறையொன்றை வகுக்குமாறு பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.