தற்போதைய அரசாங்கத்தில் கட்சிக்கு அறிவிக்காமல் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மருதானையிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சிக்கு தெரிவிக்காமல் பதவியேற்ற சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோருக்கு எதிராக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல் இவர்களுக்கும் கட்சிக்கு அறிவிக்காமல் பதவியேற்றதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பிரிவினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு பிரிவினருக்கு வேறொருசட்டமும் இருக்க முடியாது கட்சியில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.