‘நெருக்கடியான காலத்திலும் அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்று பணம் சம்பாதிக்கின்றது’: திஸ்ஸ

Date:

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசாங்கம் விற்பனை செய்வதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, மக்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கும் முதன்மைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம், நெருக்கடியான சூழலில் நாட்டின் வளங்களை விற்று பணம் சம்பாதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‘இன்று, நாடு முழுவதும் பெட்ரோலிய விநியோகம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.டோக்கன் முறை பயன்படுத்தப்படுவதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறுகிறார்.

மேலும் வாரந்தோறும் எண்ணையை எண் வரிசைப்படி பெற்றுக்கொள்ளும் முறை அமைக்கப்படும் என்றார். உண்மையில் இந்த நாட்டில் ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லை.

இப்போது பெட்ரோலியத்துறை அமைச்சர் அருமையான தீர்வு சொல்கிறார். இலங்கையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விநியோகிப்பதற்காக விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில், நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று, இலங்கையின் உள்ளுர் வளங்களை மீண்டும் ஒருமுறை விற்று பிரச்சினையை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிக்கிறது.

மேலும், இது ஒரு சோகமான நிலை. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தற்போது கடைப்பிடித்து வரும் உத்தியை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரம் வழங்குவது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும்.

அதைச் செய்யத் தவறிய அரசாங்கம் நெருக்கடியான காலத்தில் நாட்டின் வளங்களை விற்று பணம் சம்பாதிக்க முயல்கிறது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...