இலங்கையின் கல்வி அமைச்சுக்கு 1,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைச் சிறார்களுக்கு விநியோகிப்பதற்காக 44 கொள்கலன்களில் குறித்த அரிசித் தொகை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
7,900 பாடசாலைகளில் 1.1 மில்லியன் குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஆறு மாத வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 10,000 மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் மேலும் இரண்டு அரிசி இருப்புக்கள் வழங்கப்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு புத்தாண்டுக்கான சீருடைகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
44 containers of 1,000 metric tonnes rice donated by #Chinese people to #SriLankan students have arrived and been handed over to 🇱🇰 Ministry of Education today.
🇨🇳 gifts a total of 10,000 MT of rice to 7900 schools across #lka and supports its School Meal Program for 6 months. pic.twitter.com/EGnYHMnpt6
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) June 28, 2022