ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஒரு வருட அடிப்படையில் மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த நிலங்களில் கௌப்பி, பச்சைப்பயறு,மரக்கறி உள்ளிட்ட குறுகிய கால பயிர்களை மட்டுமே பயிரிட அனுமதிக்கப்படும் என்றும், அதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பயிர்ச்செய்கை யுத்தத்திற்கு ஆதரவாகவே இந்த புகையிரத நிலங்களை பயிர்ச்செய்கைக்காக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தா