குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை ரூ. 40 ஆகவும், மற்ற பேருந்து கட்டணங்களை 30வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பு அடுத்த மாதம் ஜுலை 1ஆம் திகதி முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கலந்துரையாடலில் பேருந்து தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பிரிவினருக்கும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.