‘மக்கள் எதிர்பார்த்ததை செய்ய முடியவில்லை: பொருளாதார மந்த நிலைக்கு தாம் பொறுப்பல்ல’ – பசில்

Date:

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இன்று முற்பகல் அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது பதவி விலகல்தொடர்பான கடிதத்தை கையளித்தார்.

இதனையடுத்து பசில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அது தொடர்பில் அறிவித்துள்ளார்.

இதன்போது தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் இனி அரச நிர்வாக விடயங்களில் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘1951 ஆம் ஆண்டு முதல் இந்த நாடு கடன் வாங்கி செலவு செய்து வருகிறது, எந்த அரசாங்கமும் இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

நாடும் நாட்டு மக்களும் இரு காலில் நிற்கும் வகையில் நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். இருப்பினும், இன்று நாடு எதையாவது பெறுகிறதென்றால், அதற்கு நான்தான் காரணம்.

நிதியமைச்சர் பதவியை கைப்பற்றும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், தன்னால் முடிந்ததை தனது பலத்தால் செய்ததாகவும் மக்கள் எதிர்பார்த்ததை செய்ய முடியவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் பசில்  தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு தாம் பொறுப்பல்ல என தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச, வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சிக்கு தாம் பொறுப்பல்ல .

தமக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் காரணமாகவே இன்று நாடு எண்ணெய் மற்றும் மாவைப் பெறுவதாக முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்தார்.

அதேபோலத் தான் நான் பேச்சுவார்த்தை நடத்திய கடன் வரிகளைப் பயன்படுத்தி இன்று நாங்கள் எரிபொருள், உரம் மற்றும் மருந்துகளை கொண்டு வருகிறோம், ‘என்று பசில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘நாங்கள் சில காலமாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ஆனால், சிலருக்கு இது பிடிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து கலந்துரையாடியிருந்தனர்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது தொடர்பாக நிதியமைச்சகத்திற்கும் மத்திய வங்கிக்கும் இடையில் கருத்து வேறுபாடு உள்ளது.

‘அரசாங்கத்தில் இரண்டு குழுக்கள் இருந்தன, சர்வதேச நாணய நிதி ஆதரவைப் பெற விரும்பும் மக்களிடம், அவ்வாறு செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று நான் கேட்டேன்.

சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதாக இருந்தால், வலிமையான நிலையில் இருந்து கொண்டே செல்ல வேண்டும் என்று இந்தியா எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது,’ என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை பொதுஜன பெரமுன கட்சியின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தான் பதவி விலக தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...