கஹட்டோவிட்ட பகுதியைச் சேர்ந்தவரும் கட்டார் நாட்டில் வசிப்பவருமான பொறியியலாளர் அல் ஹாஜ் மொஹமட் இஃஹாம், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு தேவையான பரிசோதனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.
அவரின் மகனாக மகன் உசைத்தின் பெயரில் இந்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.
அதற்கமைய 163,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய இரசாயனப் பொருட்களை வைத்தியசாலையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு சில பரிசோதனைகளின் பாவனைக்காக வழங்கியுள்ளார்.
இந்த இரசாயனங்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதோடு இந்த உதவியின் நோக்கம், வரவிருக்கும் சில மாதங்களுக்கு மருத்துவமனையில் இரசாயனப் பற்றாக்குறையை எளிதாக்குவதாகும்.
மேலும் 37,000 ரூபா பெறுமதியான மற்றொரு இரசாயணப் பொருட்களும் ஆய்வகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.