மாணவர்களின் கல்விப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் (21) ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.
இதன்போது, ஈஸ்டர் தாக்குதல், கொவிட் தொற்று போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி, 2019 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சமூக-அரசியல் பேரழிவினால் இலங்கைப் பிள்ளைகளின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்படும் என்று சபை நம்புவதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கல்வி இழப்பு மற்றும் நேர இழப்பு போன்றவற்றால் விரக்தியடைந்து மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்பள்ளிப் பிள்ளைகள் கூட மிகவும் உணர்திறன் மிக்க தீர்வைக் காண்பது பெரியவர்களின் பொறுப்பாகும் என்று அழகப்பெரும கூறினார்.