ரஷ்யாவின் உதவியை அரசாங்கம் விரும்பவில்லை: விமல்

Date:

பொருளாதாரம் வலுவடைந்த ரஷ்யாவின் ஆதரவிற்காக அரசாங்கத்திற்கு எந்த ஆர்வமும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொடர்பு கொண்டால், இந்தியாவை போன்று இலங்கைக்கும் ரஷ்யாவில் இருந்து எரிபொருளை குறைந்த விலையில் இறக்குமதி செய்யமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெற்றுள்ளன. எனினும் இது அரச தலைவர்கள் மட்டத்தில் இடம்பெறுமாக இருந்தால், தீர்வை எட்டமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஷ்யாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அமைச்சர் ஜி. எல் பீரிஸ் தம்மிடம் குறிப்பிட்டதாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...