இலங்கைக்கான மேலதிக நிதியுதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய அரசாங்கத்தின் விசேட குழுவொன்று இன்று இலங்கைக்கு வந்துள்ளது.
அதற்கமைய இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவத்ரா, பொருளாதார இந்திய பொருளாதார விவகார செயலாளர் – அஜய் சேத், இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர். வி.ஆனந்த நாகேஸ்வரன் உட்பட நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும் இந்த குழு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஜூன் 22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியக் கடன் வரியின் கீழ் அண்மையில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெற்ற போதிலும், இந்தியாவிடம் இருந்து புதிய உதவிகளை கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை, சீனா, இந்தியா மற்றும் ஜப்பானை நன்கொடையாளர் மாநாட்டிற்கு அழைத்து அதிக வெளிநாட்டு உதவிகளை வழங்குவதுடன், ஆகஸ்ட் மாதம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் என்று பிரதமர் விக்கிரமசிங்க நேற்று (ஜூன் 22), சர்வதேச நாணய நிதியத்துடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தெரிவித்தார்.