நாட்டில் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் இன்று நாடளாவிய ரீதியில் 10 வீதமான தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக நேற்று பஸ் கட்டணம் 30 சதவீதம் அதிகரித்து குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 40. அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில்,பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டதால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் பயணம் செய்வது, ஃபுட் போர்டில் பயணம் செய்வது, பேருந்துக்கு பின்னால் உள்ள ஏணிகளில் தொங்குவது போன்றவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.