இலங்கைக்கு பெட்ரோல் கப்பல் வருவதில் தாமதம்!: எரிசக்தி அமைச்சர்

Date:

இலங்கைக்கு இன்றைய தினம் அதிகாலை வரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதமாகவே வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட அளவு பெற்றோல் விநியோகிக்கப்படும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் டீசலின் வரையறுக்கப்பட்ட முறையில் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று ஜூன் 23 அதிகாலையில் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் வந்து சேரும் என   அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அதன் வருகை இப்போது தாமதமாகியுள்ளது.  எனவே ஜூன் 24 வெள்ளிக்கிழமை கொழும்பில் பெட்ரோல் கப்பல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் கொழும்பில் உள்ள அனைத்து முக்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டாலும், எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளை காணமுடிந்தது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...