இலங்கையின் அவசர விடயங்கள் குறித்து மிலிந்த மொரகொட இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சருடன் பேச்சு!

Date:

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பெற்றோலியத்துறை அமைச்சரான ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு புது டெல்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பான பல அவசர விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சந்திப்பின் போது, ​​இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் எரிபொருளைப் பெற்று விநியோகம் செய்வதில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து மிலிந்த மொரகொட, இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பூரிக்கு விளக்கினார்.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவகாரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...