(File Photo)
‘ஒரு நாடு – ஒரே சட்டம்’ தொடர்பில் செயற்படும் ஜனாதிபதி செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அதற்கமைய இந்த அறிக்கை ஜூன் 17 ஆம் திகதி இறுதி செய்யப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர் அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் மறுபரிசீலனை செய்யப்பட்டதாக செயலணியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன்படி, செயலணித் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் ஏனைய உறுப்பினர்களினால் அறிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது மக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைக் கேட்டறிந்து செயல்திட்டத்தைத் தொடர்ந்து செயலணியின் அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.