பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் புனர்வாழ்வு பணியகத்தின் கீழ் உள்ள கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சுமார் ஆயிரம் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த மோதலுக்கு மத்தியில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையம் என்பது போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு நிறுவனமாகும், இது நீதி அமைச்சின் கீழ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தால் நடத்தப்படுகிறது.