அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், இன்றும் (28) லாஃப் கேஸ் சிலிண்டர்களுடன் மக்கள் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வரிசையில் காணப்படுகின்றனர்.
இந்த வரிசைகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அறிமுகமில்லாதவை.
எனினும், ஏறக்குறைய ஒரு வாரமாக சிலிண்டர்களுக்காகக் காத்திருந்த காலி குடியிருப்பாளர்களுக்கு லாஃப் கேஸ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளது.
காலி கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே காலி எரிவாயு சிலிண்டர்களுடன் வரிசையாக வைத்திருந்தனர்.
நாளை (29) ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கையின் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக லாஃப்ஸ் கேஸ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளது.