பொருளாதார நெருக்கடிகள் நீங்க தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் நீங்க நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் விஷேட பிரார்த்தனை நிகழ்வொன்று கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது.

மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்க கடந்த 26ம் திகதி பள்ளிவாசலுக்கு வருகை தந்து மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் நீங்கி அனைத்து இன, மத மக்களும் சாந்தி சமாதானத்துடன் வாழ ஆசி வேண்டி விஷேட துஆ பிரார்த்தனையை, தேசிய ஜக்கியத்துக்கான சர்வ மதங்கள் கூட்டமைப்பின் சம-தலைவர்  அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி நிகழ்த்தினார்,

இதனையடுத்து தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ரியாஸ் சாலி, பள்ளிவாசல் சார்பாக, அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி விஷேட நினைவு சின்னமொன்றை வழங்கி வைத்தார்,

இவ்வைபவத்தில் உலமாக்கள், தெவட்டகஹ பள்ளிவாசல் நிர்வாக சபையினர்கள், அகில இலங்கை சூபி தரீக்கா உயர்பீட உறுப்பினர்கள் உற்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...