கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார்!

Date:

இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல கட்சித் தலைவர்களுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று மாலை 04.00 மணிக்கு விசேட கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று பிற்பகல், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்து விரைவான தீர்வுக்கு வருவதற்காக அவசர கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை இன்று முற்றுகையிட்ட பொது மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி பாரிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...