புஸ்ஸலாவ தேயிலை தொழிற்சாலையில் தீ பரவல்: பெருந்தொகை தேயிலை சேதம்!

Date:

புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயிலன் தோட்டத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை ஏரிந்து நாசமாகியுள்து.

தீயை அணைக்க புஸ்ஸலாவ பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போதும் தீயினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ வீபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியபடவில்லை.மேலும் மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ காரணமாக தொழிற்சாலையின் கட்டிடத்திற்கும், இயந்திரங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் தயாரிக்கப்பட்டிருந்த பெருந்தொகை தேயிலையும் சேதமாகி உள்ளது.

இத் தீ விபத்து தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...