ரணில்- சஜித் கடும் வாக்குவாதம்: ‘எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறத் தவறிவிட்டது’

Date:

பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரமேதாசவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் ஆரம்பமானதும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் பிரதமரும் அவரது அரசாங்கமும் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறும்போது எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறத் தவறிவிட்டதாக பிரதமர் கூறினார்.

பொருளாதாரம் நெருக்கடி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தி சபையில் பிரதமர் ரணில் உரையாற்றினார்.

இதனையடுத்து எதிர்க்கட்சித்தலைவர் வேலைத்திட்டங்களை செய்ய முடியாத பிரதமரே உள்ளதார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாற்று அரசாங்கமான எதிர்க்கட்சிக்கு ஆட்சியை ஒப்படைக்குமாறு கோருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் பதிலளிக்கும் போது எதிர்க்கட்சியினரிடம் முறையான செயற்றிட்டங்கள் இல்லை. அப்படியிலுந்தால் அதனை முன்வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை தொடர்ந்து கருத்து வெளியிட்ட சஜித் பிரமேதாச,  ரணில் விக்கிரமசிங்கவிடம் நாங்கள் படிக்கவில்லை எனது தந்தையே அவருக்கு அரசியல் கற்பித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் ஜப்பானிய நிறுவனத்திடம் ‘Taisei.’ என்ற பெயரில் கமிஷன் கோரியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிந்து கொண்டதாகவும், இது தொடர்பில் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...