இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசியப் பட்டியலில் இருந்து இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலி பீரிஸை நியமிக்குமாறு முன்மொழிந்து மூன்று முன்னாள் ஆளுநர்கள் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதற்கமைய ஜனாதிபதியின் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, ரஜித் கீர்த்தி தென்கோன் மற்றும் அசாத் சாலி ஆகிய மூன்று முன்னாள் ஆளுநர்களினால் குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நாட்டின் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களுக்கு இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கட்சி சார்பற்ற சுதந்திரமான சாலிய பீரிஸை நியமிப்பதே பொருத்தமானது என அவர்கள் பரிந்துரைப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அரச அடக்குமுறை அதிகரித்து நாடு ஆபத்தான நிலையில் இருந்த போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் சட்டத்தரணிகளும் பெரும் பங்காற்றியதை குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சாலிய பீரிஸை ஜனாதிபதியாக நியமிப்பதன் மூலம், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஒருவரை பிரதமராக நியமித்து, கட்சிகளையும் குழுக்களையும் பிரதமராக நியமிக்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு உண்மையான அர்த்தமுள்ள சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கி, பொதுவான உடன்படிக்கைகளை உருவாக்க முடியும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.