அரசாங்கத்திடம் திட்டம் இல்லை, திட்டம் பற்றி பேசுபவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா கூறுகிறார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (5) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் எந்தவொரு முறையான வேலைத் திட்டத்தையும் கூறவில்லை.
அரசாங்கத்திடம் சரியான திட்டம் இல்லாத காரணத்தினால் சர்வதேச நாணய நிதியம் தற்போது உதவிகளை வழங்குவதில் இருந்து பின்வாங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்க தயார் என எம்.பி தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள நிலையில், தனக்கு 3 வழங்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மணிக்கணக்கில் பேசுபவர்கள் முன்வைக்கும் திட்டம் என்ன என கேள்வி எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.