உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் ஒருவர் வெளிநாட்டு நாணய தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்மாடுவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீடொன்றை சோதனையிட்ட போது 17 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
வீட்டில் இருந்து 18,208 அமெரிக்க டொலர்கள், 20,035 யூரோக்கள், 645 பிரித்தானிய பவுண்டுகள், 100,000 ஜப்பானிய யென்கள், 1000 கட்டார் ரியால்கள் மற்றும் 18,500 திர்ஹம்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் காணப்பட்டன.