இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 75ஆவது சுதந்திர தினம்!

Date:

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வாழ் பாகிஸ்தானிய சமூகத்தினர் பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தின ”வைரவிழாவை” இன்று ஆகஸ்ட் 14ம் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் கொண்டாடினர்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் ஃபாரூக் புர்கி  பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது பாரம்பரிய ஆர்வத்துடன் மற்றும் பாகிஸ்தானை வலுவான, ஆற்றல்மிக்க, முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றும் உறுதி பூணப்பட்டது.

இந் நிகழ்வில் திருமதி அஸ்மா கமால்,   பாகிஸ்தான் ஜனாதிபதி, ஆரிஃப் அல்வியின்  செய்தியை வாசித்தார். ‘பாகிஸ்தானின் 75ஆவது சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியான இச் சந்தர்ப்பத்தில், முழு தேசத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந் நிகழ்வில் ‘பாகிஸ்தானை’ செதுக்குவதற்காக காஇத் ஏ ஆஸம் முஹம்மது அலி ஜின்னாவின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் பாகிஸ்தானின் ஸ்தாபக தந்தைகள் ஆற்றிய எண்ணற்ற தியாகங்கள் இங்கு நினைவு கூறப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமரின் செய்தியை, கல்சூம் கைசர், பார்வையாளர்களுக்காக வாசித்தார். குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

’75வது சுதந்திர தினம் நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம்.

இன்று நாம் துணைக் கண்டத்தின் முஸ்லிம்களுக்கு செழுமையான அஞ்சலிகளை செலுத்துகிறோம், மேலும் அவர்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்காகவும், ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான தியாகத்திற்காகவும் அவர்களுக்கு எங்கள் கூட்டு நன்றியைத் தெரிவிக்கிறோம்.

அனைத்துவிதமான கணிப்புக்கள் மற்றும் மதிப்பீடுகளை முறியடித்து, நண்பர்களையும் எதிரிகளையும் ஒரே மாதிரியாக திகைக்கச் செய்த ஒரு அதிசயத்திற்குக் குறையாமல் பாகிஸ்தான் வளர்ச்சி கண்டுள்ளது எனவும் அச்செய்தி யில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு உரை யாற்றிய இலங்கை க்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தனது உரையில், ஆகஸ்ட் 14 ஆம் திகதி, எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றியுடன் தலை வணங்கும் மகிழ்ச்சியான நாள்.

என்றும், குறிக்கோள்களுக்காக ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்ற உறுதிமொழியை புதுப்பிக்கும் நாள் என்றும் கூறினார்.

இன்று நாம் எமது முன்னோர்களையும் தியாகிகளையும் நினைவு கூர்வதுடன், சுதந்திரமான தாயகத்தை எமக்கு வழங்குவதற்கு அசாதாரண தியாகங்களைச் செய்தமைக்காக அவர்களுக்கு எமது நன்றிகளை செலுத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாகிஸ்தான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகள் மற்றும் உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாகிஸ்தானின் நண்பர்கள் உட்பட ஏராளமான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை கொழும்புக்கு வந்துள்ள பாகிஸ்தான் நாட்டின் PNS Taimur அரச கப்பலின் அதிகாரிகளும் கலந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...