ஓமன் மற்றும் இலங்கைக்கு இடையில் விவசாயத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அதற்கான உத்தேச ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரினால் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதன்படி, விவசாய அமைச்சர் சமர்ப்பித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல மேலும் தெரிவித்துள்ளார்.