பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை என்றும் நாடு புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் இந்திப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம், மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது.
பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடெங்கும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் வண்ணமயமான அலங்காரங்களால் ஜொலிக்கிற டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார்.
இதன்போது, நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த மோடி, சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை நினைவு கூர்ந்தார்.
நாடு புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்னேறிய எந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டின் குடிமக்களிடம் ஒழுக்கம் ஆழமாக பதிந்துள்ளது. அதேபோன்று மக்கள் அனைவரும் தங்கள் பொறுப்புகளை பின்பற்றினால் இந்தியா வேகமாக வளரும்.
குறிப்பாக இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களுக்கான மரியாதை என்பது முக்கிய தூண் ஆகும். ஆகவே நமது பெண்களின் சக்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது. கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் டிஜிட்டல் மூலம் புரட்சி ஏற்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Addressing the nation on Independence Day. https://t.co/HzQ54irhUa
— Narendra Modi (@narendramodi) August 15, 2022