காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த குழுவாக பொது தீர்மானம் எடுக்கப்பட்டதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சட்டத்தரணி,
காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த குழுவாக நாம் பொதுவான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
இதனால் போராட்டம் முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை என்றும், முறை மாற்றம் வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் மனோஜ் நாணயக்கார தெரிவித்தார்.
மேலும், ‘இந்த அமுலாக்கத்தின் மூலம் கிராமம் வரை போராட்டத்தை எடுத்துச் சென்றுள்ளோம், உள்ளூரிலும், நகரங்களிலும் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி உச்சத்துக்கு உயர்த்த தயாராக உள்ளோம்.
இன்று அடக்குமுறை மிகவும் கடுமையாக உள்ளது. நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். அடக்குமுறை அதிகமாக, போராட்டமும் வளர்கிறது. இதை ஒரு அரசாலும் தடுக்க முடியாது’ என்றார்.
பிராந்திய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.