அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

Date:

விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் நிறுவனம்) கோரிக்கை கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினதும் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அர்ஜுன ரணதுங்க வெளியிட்ட கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு வழங்குமாறு கோரியே அர்ஜுன ரணதுங்கவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் கடிதம் அனுப்பியுள்ளது.

விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க அண்மையில் ஊடக நேர்காணலின் போது வெளியிட்ட பொய்யான, இழிவான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட கருத்து தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று அவசரமாகக் கூடி ஆராய்ந்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவுக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பேசி, அதன் நன்மதிப்பு மற்றும் நற்பெயரைக் கெடுத்து, வேண்டுமென்றே இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவுக்கு எதிராக பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பகிரங்க கருத்துக்களை வெளியிட்டதால் அவருக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய, பொய்யான மற்றும் இழிவான கருத்துக்களின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு ஏற்படுத்திய நற்பெயர் இழப்புகளுக்கு 2 பில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு கோரி, அர்ஜுன ரணதுங்கவுக்கு நிறைவேற்றுக் குழுவினர் கோரிக்கை கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மிச்சிகன் செனட் தேர்தல்: யூத பின்புலம் கொண்ட ஹேலி ஸ்டீவன்ஸை வீழ்த்தி அப்துல் எல்-சயீத் வரலாற்று வெற்றி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற மாநில செனட் சபைக்கான (US Senate)...

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை வரும் 24 ஆம் திகதி..!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம்...

2029-க்குள் ‘மெட்ரோ பஸ்’ சேவை 500 ஆக உயர்த்த திட்டம்!

கொழும்புக்கு அப்பால் ஏனைய மாவட்டங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவாக்கம் செய்து,...

மஹர சிறைச்சாலை சேதங்களை மதிப்பிட 5 பேர் கொண்ட குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைதிகளால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை...