நாட்டின் கரையோரப் பகுதிகளில் பலத்த மழை

Date:

சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலையில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை...

இரத்தினபுரி -குருவிட்ட சிறைச்சாலை மோதல்- 2 பேர் உயிரிழப்பு – 4 கைதிகள் காயம்!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர்...