இலங்கையின் முன்னேற்றம், ஜனாதிபதி ரணிலின் திறமையில் உள்ளது : எகிப்து ஜனாதிபதி நம்பிக்கை

Date:

இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆற்றலில் எகிப்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக எகிப்து அரபுக் குடியரசின் ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அப்தெல் ஃபாத்தா, குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடைய வேண்டுமென ரணில் விக்கிரமசிங்கவை வாழ்த்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இரு நாடுகளின் பொதுவான நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் மேலும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக இருப்பதாக எகிப்திய ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...