பல்கலைகழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர் புகை தாக்குதல்!

Date:

பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது  கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போராட்டம் மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகில் ஆரம்பமாகியது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தவும், கைது செய்யப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகாமையில் பொலிஸார், கலகத் தடுப்புப் பிரிவு மற்றும் நீர் பீரங்கிகளும் நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், கலைஞர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...