ரீ – 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் இருவர் கைது!

Date:

ரீ – 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டி – மோதரவான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் உடவளவ இராணுவ முகாம் அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து, ரீ-56 ரக துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 10 கிராம் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் சந்தேகநபர்களின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, அவர்களில் ஒருவரது வீட்டிலிருந்து போலியான வகையில் தயாரிக்கப்பட்டிருந்த 2 வாகன இலக்க தகடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் கஹவத்தை மற்றும் எம்பிலிப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பதுடன், சந்தேகநபர்கள் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...