பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக மாற்றப்படும் – அலி சப்ரி

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மாற்றம் உடனடியாக மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று (செப்.5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் அமைப்புகளின் நியாயமான விமர்சனத்தின் அடிப்படையில் இந்தப் புதிய மாற்றம் மேற்கொள்ளப்படும் என்று சப்ரி தெரிவித்தார்.

இதன்படி, இந்த புதிய மாற்றம் தொடர்பான உண்மைகளை ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் முன்வைப்பதாகவும், போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கு இந்த நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நாடவுள்ளதாக அலி சப்ரி தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பல பாரிய நெருக்கடிகளின் பின்னர் தேசிய நல்லிணக்கத்துக்கான நீண்டகால தீர்வுகள் தேடப்பட்டு வரும் இவ்வேளையில் மனித உரிமைகள் அமர்வில் கலந்துகொள்வதில் தயக்கமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தற்போதுள்ள நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், பல்வேறு காரணங்களால் அது நியாயமானது என்றும், அமைதியான முறையில் போராடுபவர்களுக்கு வெற்றியின் இலக்கில் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக ரீதியில் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், எதிர்காலத்தில் பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதார முறைமை தயாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜப்பான், சீனா, இந்தியா, பாரிஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரவளிப்பதாகவும், கடன்களை மறுசீரமைக்க தேவையான நடவடிக்கைகளுக்கு உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஒரு நாடு என்ற ரீதியில் வசூலிக்கப்படும் வரித் தொகை மிகவும் குறைவாக உள்ளதாகவும், ஆனால் செலவுகள் அதிகரிப்பால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...