அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது குறித்து கருத்து தெரிவித்த நாமல்,
நாட்டில் குடிமகனாக வாழ்வதற்கான உரிமை. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம்,’ என்றார்.
மேலும், ‘எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதிதான் தீர்மானிக்க வேண்டும். அவர் அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும்.
மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை, முன்னாள் ஜனாதிபதி தனது முடிவை எடுத்தவுடன் கட்சியின் நிர்வாக சபைக்கு அறிவிப்போம் என்றார்.