கண்டியில் இருந்து எல்ல வரையிலான புதிய ரயில் சேவையான ‘எல்ல ஒடிஸி’க்கு என இரண்டு ரயில் பயணங்களை இலங்கை ரயில்வே திணைக்களம் சேர்த்துள்ளது.
எல்ல ஒடிஸி ரயில் சேவையின் கூடுதல் ரயில் பயணங்கள் செப்டம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் என ரயில்வே துணை செயல்பாட்டுக் கண்காணிப்பாளர் வி.எஸ். பொல்வட்டகே தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வியாழனன்றும், ‘எல்ல ஒடிஸி’ கொழும்பில் இருந்து பதுளை வரை இயங்கும், வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் பதுளையிலிருந்து திரும்பும் பயணத்தை மேற்கொள்ளும்.
மேலும், உள்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் தேவை அதிகமாக இருந்ததால் மேலும் இரண்டு ரயில் பயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பொல்வத்தகே கூறினார்
பயணிகளின் பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கும் நாளிலிருந்து 14 நாட்களுக்கு முன்னதாகவே ஆசன முன்பதிவுகளை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.