பக்கிங்ஹாம் அரண்மனை இரண்டாம் எலிசபெத் மகாராணியின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
கரும்பலகையில் அவரது தந்தை ஜார்ஜ் VI, தாய் எலிசபெத் I மற்றும் கணவர் பிலிப் தி டியூக் ஆகியோரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
மறைந்த மகாராணியின் உடல் கடந்த 19ம் ஆம் திகதி மதியம் வின்ட்சர் கோட்டை செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் உள்ள கிங் ஜார்ஜ் ஆறாம் நினைவு தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள், மக்கள் கூட்டம் ஏதுமின்றி குடும்பத்தினர் முன்னிலையில் எலிசபெத் உடல், மறைந்த அவரது கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை வீடியோ பதிவு செய்யவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை.