காத்தான்குடி மஸ்ஜித்துக்கு சென்ற சிங்கள நடிகை விவகாரம்: மார்க்கம் விரிவானது, மறந்துவிடாதீர்கள்!

Date:

அண்மையில் சிங்கள நடிகை ஒருவர் இலங்கை காத்தான்குடி பள்ளிவாசலுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

சமீப நாட்களாக கிழக்கிழங்கையில் பிரசித்தி பெற்ற காத்தான்குடி நகரிலுள்ள பள்ளிவாசல் பற்றிய கதையாடல்கள் முகநூலில் இடம்பெறுவதைக் காணமுடிகின்றது.

குறித்த பள்ளிவாசல் இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையின் ஆணிவேரின் அடையாளத்தையே காத்தான்குடியில் நிர்மாணித்துள்ளார் அமைச்சர் ஹிஸ்புல்லா.

இது ஏதோ போகிற போக்கில் கட்டப்பட்ட பள்ளிவாசல் அல்ல. பள்ளிவாசல் இல்லாத ஓர் ஊரில் நிர்மாணிக்கப்பட்டதுமல்ல. நாம் பாலஸ்தீன மக்களுடன் உயிரும் சதையுமாக இணைந்திருக்கிறோம் என்பதை இப்படியொரு பள்ளிவாசலை நிர்மாணித்தே தான் வெளிப்படுத்த வேண்டுமா?

இந்தப் பள்ளிவாசல் கட்டட அமைப்பினால் மட்டுமல்ல எல்லாவித உட்கட்டமைப்பு வடிவமைப்பு, சுவர்கள், பளிங்கு கற்கள் அனைத்தும் ஜெருசலத்தில் உள்ள அல் அக்ஸாவை ஒத்திருக்கிறது.

ஜெருசல அல் அக்ஸாவைப் போலவே காத்தான்குடியிலும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் ஒரேநேரத்தில் தொழ முடியும். இந்தப் பள்ளிவாலுக்கான மின்சாரம், நீர், மாதாந்த பராமரிப்பு என்று செலவு தனி.

ஏனினும், முரண்நகை என்னவென்றால் சமாதானத்தின் அடையாளச் சின்னமாக நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலுக்கு ஒரு சிங்களப் பெண் சென்றார் என்று சமூக வலைத்தளத்தையே இன்று கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்

என்னவாக இருந்தபோதிலும்? முஸ்லிம்களில் சிலர் இந்தப் பெண்மணியின் பள்ளிவாசல் வருகையைக் கடுமையாக முட்டாள்தனமாக கண்டித்துப் பதிவிட்டுள்ளார்கள்.

பள்ளிவாசலைப் பார்க்க விரும்பிய அந்த சிங்கள நடிகையை முஸ்லிம்களே நன்கு வரவேற்று உபசரித்துப் பள்ளியைச் சுற்றிக் காட்டியிருக்க வேண்டும்.

நல்லதொரு அழைப்பியல் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டார்கள். அந்தச் சிங்கள நடிகை மிகுந்த வருத்தத்துடன், ‘ஏன் இப்படிப் பெண்களை வெறுக்கிறீர்கள்? உங்கள் தாய், சகோதரி, மகள் எல்லாம் பெண்கள்தானே?’ என்று சிங்கள மொழியில் பதிவிட்டுள்ளதாக ஒரு நண்பர் முகப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.

வானளாவிய ஒரு மார்க்கத்தை- வாழ்வியலைச் சிலர் சின்னச் சிமிழுக்குள் அடைக்கப்பார்க்கிறார்கள்.

மார்க்கம் விரிவானது. மறந்துவிடாதீர்கள் என முகப்புத்தகத்தில் சிராஜுல் ஹஸன் என்பவர் பதிவிட்டுள்ளார்.

அவரது முகப்புத்தகத்தில் இருந்து….

சிங்கள நடிகையின் பள்ளிவாசல் வருகை பற்றிப் படித்ததும் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.

அன்றைக்குத் தமிழ்த் திரையுலகில் கவர்ச்சி நடிகை ஒருவர் பெரும் பரபரப்புடன் இருந்தார்.

கவர்ச்சி என்றால் அப்படி ஒரு கவர்ச்சி.. இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன். என் எழுத்தாள நண்பர் ஒருவருக்குத் திடீரென ஓர் எண்ணம் உதித்தது..

அந்த நடிகைக்குக் குர்ஆன் மொழியாக்கத்தைப் பரிசாகத் தரவேண்டும் என்று விரும்பினார்.

அப்படிச் செய்தால் சமுதாயத்தில் எதிர்ப்புக் கிளம்புமோ என்றும் கொஞ்சம் தயங்கினார்.

அவருக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் இதைச் சொல்லி ஆலோசனை கேட்டுள்ளார்.
‘என்னது…கவர்ச்சி நடிகைக்குத் தூய வேதமா? அதெல்லாம் தரக்கூடாது…வேண்டவே வேண்டாம்’ என்று பலரும் அவரைத் தடுத்துவிட்டார்கள்.

அவர் என்னிடம் வந்து ஆலோசனை கேட்டார். ‘மிக மிகச் சிறந்த பணி சகோதரரே.
‘தாராளமாக அந்த நடிகைக்கு நீங்கள் குர்ஆன் மொழியாக்கம் தரலாம். எந்தத் தயக்கமும் தேவையில்லை. ‘மற்ற துறையில் இருப்பவர்கள் எப்படி நம் அழைப்புக்கு உரியவர்களோ அதே போல் திரைத்துறையில் இருப்பவர்களும் நம் அழைப்புக்கு உரியவர்கள்தாம்’ என்றேன்.

அந்த நண்பர் தயக்கம் நீங்கி புது உற்சாகம் பெற்றார். நடிகையிடம் நேரம் கேட்டு அவரை நேரில் சந்தித்துத் திருக்குர்ஆனை அன்பளிப்பாகவும் வழங்கினார்.

எதற்குச் சொல்கிறேன் எனில், இறைவன், இறைத்தூதர், இறைவேதம் எல்லாம் முஸ்லிம்களுக்கு மட்டுமே உள்ள குலச்சொத்தோ குத்தகைச் சொத்தோ அல்ல.

இறைவன்- அகில மக்கள் அனைவருக்கும் இறைவன்- ரப்புல் ஆலமீன்
இறைத்தூதர்- அகில மக்கள் அனைவருக்கும் ஓர் அருட்கொடை- ரஹ்மத்துல் ஆலமீன்
இறைவேதம்- அகில மக்கள் அனைவருக்கும் உரிய நினைவூட்டல்- திக்ருல் ஆலமீன்
என்றுதான் இறுதி வேதமே பிரகடனப்படுத்துகிறது.

இஸ்லாமிய வாழ்வியலைக் குண்டுசட்டிக்குள் பூட்டிவைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. -சிராஜுல்ஹஸன்

நமது பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசலை மாற்று மதத்தவர்கள் நல்ல முறையில் ஆடை அணிந்து சென்று பார்வையிட்டால் தேவை இல்லாத விமர்சனங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

இப்படி விமர்சிப்பது நல்லதல்ல பள்ளிவாசல் எல்லோருக்கும் பொதுவானது நல்லமுறையில் ஆடை அணிந்து மரியாதையா சென்று பார்வை இடுவதில் தப்பே இல்லை.

இஸ்லாம் மார்க்கம் ஒருவருக்கு மட்டும் உரித்தான மார்க்கம் மட்டுமில்லை. மாறாக நாம் அதை படித்து அறிந்து புரிந்து செயற்படுவதால் அதை நாம் உயிராக நேசிக்கிறோம்.

அதேபோல்தான் மாற்று மதத்தவர்கள் அதை பார்த்து கேட்டு அறிந்து கொள்வதற்காகவும் பள்ளிகளுக்கு வரலாம்.

அதன் மூலம் இறைவன் அந்த சகோதரிக்கு ஹிதாயத்தையும் கொடுக்க கூடிய வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். எல்லாம் அறகந்தவன் இறைவன்.

ஆகவே நாம் அவ்வாறு பிழை என்று சொல்லி கால், கை வைத்து விமர்ச்சித்தால் மாற்று மதத்தவர் எம்மை தப்பான பார்வை கொண்டே பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு செயற்படுவது காலச் சிறந்ததாகும்.

Popular

More like this
Related

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கை நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்சவையும் பதில் செயலாளராக கீர்த்தி...

ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும்...

600,000 மாணவர்கள் காலை சாப்பாடு இன்றி பாடசாலைக்கு வருகின்றார்கள்!

600,000 பாடசாலை மாணவர்கள் காலை சாப்பாடு இன்றி பாடசாலைக்கு வருவதாக பாட்டலி...

சடுதியாக அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்: சிறுவர்களும் அதிகளவில் பாதிப்பு

நாட்டில் தொழு நோயாளர்கள் தொகை அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், இந்த...