இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென் மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

Popular

More like this
Related

அமெரிக்க செனட் வேட்பாளர் அப்துல் அல்-சயீத் தனக்கு வைக்கப்பட்ட ‘பொறியை’ சாதகமாக மாற்றிய தருணம்.

எதிர்பாராத ஒரு திருப்பமாக, மிச்சிகன் மாநிலத்தில் அமெரிக்க செனட் சபைக்கான(Senate) ஜனநாயகக்...

கொழும்பில் காசநோய் பரவ அதிக மக்கள் தொகையே முக்கிய காரணம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

கொழும்பு நகரில் பல வருடங்களாகக் காசநோய் பரவுவதற்கு அங்குள்ள அதிக மக்கள்...

ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு ஐக்கிய அரபு அமீரகம் முன்மொழிந்துள்ள வேட்பாளரான லானா நுஸைபே யார்?

ஐநா சபையின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE)...

சிறையில் உள்ள நாமலுக்கு உணர்வுபூர்வமாக கடிதம் எழுதிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கு, முன்னாள்...