‘சுதந்திரக் கட்சியின் ஜனநாயகம் கொல்லப்பட்டது’:சந்திரிக்கா

Date:

சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் மிகவும் ஜனநாயக கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (5) தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில்  ‘நவ லங்கா சுதந்திரக் கட்சி’யின் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், கட்சியின் கொள்கை அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, கட்சியின் கொள்கைகளையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பாதுகாத்த மக்களுக்காக தொடர்ந்தும் பாடுபடுவேன் இந்தக் கட்சி நீண்ட தூரம் செல்ல வேண்டுமானால் ஊழலற்ற நாட்டை உருவாக்க நினைக்கும் மக்களை மட்டுமே அதில் சேர்க்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...