ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளதாக (எக்கனெமி நெக்ஸ்ட்) Economy Next இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் முன்னணியில் உள்ளது, அதன் முதன்மை விளைவாக, அவர் ஜப்பானிய பிரதமரை டோக்கியோவில் சந்திப்பார் என்று நம்புகிறார்.
இலங்கை எதிர்கொள்ளும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் முயற்சியாக, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது குறித்து விவாதிக்க சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களை அழைக்க ஜப்பான் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளதாக Economy Next தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 25ஆம் திகதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் ஜனாதிபதி, செப்டெம்பர் 30ஆம் திகதி இலங்கைக்குத் திரும்புவார்.