‘நாட்டில் தேர்தல் நடைமுறைகளில் ஊழல் நிறைந்துள்ளது’

Date:

இந்த நாட்டில் தேர்தல் நடைமுறைகள் மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் பலவீனமாகவும் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா வலியுறுத்தினார்.

அரசியல் கட்சிகளில் உள்ளக ஜனநாயகம் உள்ளதா? என்ற கேள்வி எமக்கு இருப்பதாகத் தெரிவித்த தலைவர், சில அரசியல் கட்சிகளில் அதிகாரம் ஒரே இடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச ஜனநாயக தினக் கொண்டாட்டம் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற போதே புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிலர் தேர்தலில் பெரும் தொகையை செலவு செய்கிறார்கள், ஆனால் சில வேட்பாளர்கள் சுவரொட்டி கூட ஒட்ட முடியாது, தேர்தலில் பணம் செலவழித்தவர்களிடம் நெருக்கமும் அர்ப்பணிப்பும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேர்தலில் பணச் செலவுகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்றும் அதற்காக செலவீனக் கட்டுப்பாட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊழலில் ஈடுபடும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாகவும், ஆனால் அதனை கட்டுப்படுத்தும் திறன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...